விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, August 24, 2022

ஹேட் யூ என சொல்கிறதா உங்கள் குழந்தை உடனே கவனியுங்கள்,








எவ்வளவு சீரியஸாக குழந்தை நம்மிடம் ஒரு  விஷயத்தைப் பேசவந்தாலும் அதற்குக் 
காதுகொடுக்காமல் சென்றுவிடுபவர்கள் பலர். 

அப்படியே அவர்கள் பேசுவதைக் கேட்டாலும், அதன் வீரியம் உணராமல், `குழந்தை ஏதோ சீரியல், சினிமாவைப் பாத்துட்டு பேசுதுபோல', '

ஏதோ தெரியாம இப்படிப் பேசியிருக்கும்' என்றே நம்மில் பலரும் அவர்களை நொடிகளில் கடந்துவிடுகிறோம்.

 அவ்வளவு பரபரப்பு நமக்கு!


என்றாலும், சில வார்த்தைகளைக் குழந்தைகள் சொல்லக்கேட்கும்போது மட்டும்,`இதை இவர்கள் தெரிந்துதான் பேசுகிறார்களா' என யோசிப்போம். 

அந்த அளவுக்கு வீரியமுள்ள வார்த்தைகளாக அவை இருக்கும். அப்படியானவைதான், 
`ஐ ஹேட் யூ' என்ற வார்த்தைகள். 

`ஹேட்', அதாவது வெறுப்பு என்ற வார்த்தைக்கு முழு அர்த்தத்தையும் குழந்தைகள் உணர்ந்திருக்க வாய்ப்பே இல்லை. 

ஆனாலும், அவர்கள் அதைப் பேசுகிறார்கள்  எனும்போது, கவனம் செலுத்தவேண்டிய விஷயம் அது.








Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்